யூபிஐ (UPI) என்பது தற்போதைய டிஜிட்டல் காலங்களில் டிஜிட்டல் கட்டணத்திற்கான மிகவும் பிரபலமான வழிமுறையாகும். யூபிஐ என்பது பல அமைப்புகளில் இயங்கக்கூடிய ஒரு வகையான கட்டண முறை ஆகும், இதன் மூலம் எந்தவொரு வங்கிக் கணக்கையும் வைத்திருக்கும் எந்தவொரு வாடிக்கையாளரும் யூபிஐ-அடிப்படையிலான செயலியின் மூலம் பணத்தை அனுப்பலாம் மற்றும் பெறலாம். இந்தச் சேவையானது, ஒரு பயனரை தங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள யூபிஐ செயலியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை இணைத்து, 24/7 அடிப்படையில் மற்றும் வருடத்தின் 365 நாட்களிலும் தடையின்றி நிதிப் பரிமாற்றங்களைத் தொடங்கவும் கோரிக்கைகளை சேகரிக்கவும் அனுமதிக்கிறது.

இந்தச் சேவையைப் பயன்படுத்த ஒருவர் செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு மற்றும் அதே வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும். இதன் மூலம், ஒரு வாடிக்கையாளர் பணத்தை அனுப்பலாம் மற்றும் பெறலாம் மற்றும் இருப்புத் தொகை பற்றி விசாரணை செய்யலாம். யூபிஐ உடைய முக்கிய நன்மை என்னவென்றால், வங்கி கணக்கு அல்லது IFSC குறியீடு இல்லாமல் பணத்தைப் பரிமாற்றம் செய்ய இது பயனர்களுக்கு உதவுகிறது. உங்களுக்கு தேவையானது எலாம் மெய்நிகர் கட்டண முகவரியே (VPA). சந்தையில் பல யூபிஐ செயலிகள் உள்ளன மேலும் இது எஸ்பிஐ பே, பேடிஎம், ஃபோன்பே, டெஸ் மற்றும் பிற செயலிகள் என Android மற்றும் iOS இயங்குதளங்கள் இரண்டிலும் கிடைக்கிறது.

ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யூபிஐ) உடைய பயன்பாடுகள், அச்சுறுத்தல்கள் மற்றும் பணம் செலுத்தும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான இணைய நடைமுறைகள் குறித்து டிஜிட்டல் பயனர்கள் அறிந்திருப்பது அவசியம்.