01 டிசம்பர் 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை ஒரு வருடத்திற்கு ஜி-20 இன் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஜி-20, அல்லது 20 களின் குழு என்பது உலகின் முதன்மையாக வளர்ந்த மற்றும் வளர்ந்துக் கொண்டிருக்கும் பொருளாதார நாடுகளின் அரசுகளுக்கிடையேயான கூட்டமைப்பாகும். இதில் 19 நாடுகளும் (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா) மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) உருப்புரிமைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஜி-20 உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, சர்வதேச வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது, இது சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை கூட்டமைப்பாகத் திகழுகிறது.
மேலும் அறிக