சமூக ஊடக தளங்கள் டிஜிட்டல் பயனர்களுக்கு தகவல்களைப் பகிர்வதற்கான வசதியையும் சௌகரியத்தையும் வழங்குகின்றன, மேலும் உலக அளவில் மக்கள் இணையத்தில் ஒன்று சேர உதவுகின்றன. இந்தத் தளங்களின் விரிவான, கட்டுப்பாடற்ற மற்றும் ஒழுங்குப்படுத்தப்படாத பயன்பாடு, அத்துடன் எளிதாகக் கிடைக்கும் தன்மை மற்றும் பயனரின் தனிப்பட்ட தரவுக்கான அணுகல் ஆகியவை இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

இந்தச் சமூக ஊடக தளங்களில் பல மோசடிக்காரர்கள் உள்ளனர், அவர்கள் பல்வேறு வழிகள் அல்லது சேனல்கள் மூலம் பயனர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். குற்றவாளிகள் பொதுவாக பயனர்களைக் குறிவைத்து அவர்களைத் தாக்குவதற்குத் தேர்ந்தெடுக்கும் சில வழிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.