ஸ்மிஷிங் என்பது 'ஃபிஷிங்' உடைய இன்னொரு வடிவமாகும், இதில் ஒரு குறுகிய சேவை செய்தி (எஸ்எம்எஸ்) அல்லது குறுஞ்செய்தி, நிதி மோசடிகளைச் செய்வதற்கு பயனர்களின் தனிப்பட்ட/நிதித் தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் குறுஞ்செய்திகள் உண்மையான ஆதாரங்களில் இருந்து வந்ததைப் போல தோற்றம் கொண்டு ஏமாற்ற முயற்சிக்கப்படுகின்றன. முறையான செயலியை மறைக்கும் மோசடி மால்வேர் இடம்பெற்றிருக்கும் இணைப்புகள் அல்லது தகவல்களைச் சேகரிப்பதற்காக போலி தளத்திற்கு அவர்களை வரவழைக்கும் இணைப்பு ஆகியவற்றை பயனர்கள் பெறலாம்.

எப்படி ஸ்மிஷிங் வேலை செய்கிறது – செயல் வகை

  • பயனர்கள் இணைப்புகள்/சலுகைகள்/பரிசுகள்/வெகுமதிகளின் பதிவுகள் இடம்பெறும் குறுஞ்செய்திகளைப் பெறலாம்.
  • சந்தேகத்திற்குரிய தளங்கள்/இணைப்புகளுக்கு பயனரைத் திசைத் திருப்பலாம்
  • தனிப்பட்ட தகவலை வழங்குமாறு / இணைப்புகளைக் கிளிக் செய்யுமாறு / மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யுமாறு பயனரைக் கோரலாம்
  • தரவு கசிவுகள், மால்வேர்/வைரஸ் தாக்குதல்கள் மற்றும் இணைய மோசடிகளுக்கு வழிவகுக்கலாம்.