accessibilty toolbox
color contrast
text size
highlighting more content
zoom in

சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்தவொரு சாதனமும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் பயன்படுத்தப்படும் தனிநபர் கணினி பல்வேறு தாக்குதல்களுக்கான துணைப்பொருளாக அல்லது இலக்காக பயன்படுத்தப்படலாம்.

தனிநபர் கணினி வைரஸ்கள், ட்ரோஜான்கள், கீலாக்கர்கள் மற்றும் சில நேரங்களில் உண்மையான ஹேக்கர்களால் கூட தாக்கப்படலாம். இது தரவு திருட்டு, தரவு இழப்பு, தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவது, கடவுச்சொற்கள் போன்ற விவரங்கள் திருடப்படுவது போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் தனிநபர் கணினியின் மீது தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு அதைப் பாதுகாக்கவும்

மேசைக்கணினி/மடிக்கணினியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு சில அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். சிறந்த டிஜிட்டல் அனுபவத்தை வழங்க, நமது சாதனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.