இணைய வன்கொடுமை என்பது அச்சுறுத்தும் விதமான ஆன்லைனில் நடந்துகொள்வதாகும், இதில் மிரட்டப்படுதல், அவமானப்படுத்தப்படுதல், சங்கடத்திற்கு உள்ளாக்குதல் மற்றும் துன்புறுத்தும் விதமான பதிவுகள் அல்லது செயல்பாடுகளுக்கு ஆன்லைன் பொதுத் தளத்தில் நீங்கள் இலக்காகலாம்.

இது செல்போன்கள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், அரட்டை அறைகள், கலந்துரையாடல் குழுக்கள் மற்றும் இணையத்தில் உள்ள வலைதளங்கள் போன்ற தகவல்தொடர்பு கருவிகள் உள்ளிட்ட மின்னணு தொழில்நுட்பத்தின் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

இணைய வன்கொடுமைகளின் எடுத்துக்காட்டுகளில் குறிவைத்து குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்கள் அனுப்புவது, மின்னஞ்சல் மூலம் அல்லது சமூக வலைதளங்களின் பதிவுகள் மூலம் வதந்திகள் பரப்புவது மற்றும் சங்கடத்திற்கு உள்ளாக்கும் படங்கள், வீடியோக்கள், இணையதளங்கள் அல்லது போலி சுயவிவரங்களை அனுப்புவது ஆகியன அடங்கும்.

நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

இணைய வன்கொடுமை என்பது பிள்ளையை உணர்வுரீதியாகக் காயப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் குழுக்களில் குறிவைக்கப்படுவதால் அவர்களது சமூக விலகல், அவர்கள் துன்புறுத்தப்படுவது, மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கும், சொல்லப்போனால் அவர்களைத் தற்கொலை முயற்சிகளுக்குக் கொண்டுசெல்லவும் காரணமாகலாம்.

பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளதை அடையாளம் காண்பதற்கான சில குறிப்புகள் / எச்சரிக்கை அறிகுறிகள்

  • அவர்களுக்குஉடல்நலப்பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் ஏற்படும் என்பதுடன் சரியாகச் சாப்பிடாமல் இருப்பார்கள்
  • பள்ளிஅல்லதுகல்லூரிக்குச் செல்வதைத் தவிர்த்துத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள்
  • மனச்சோர்வு, சோகம், கவலை, கிளர்ச்சியுடன்காணப்படுவார்கள்
  • எந்தவொருசெயல்களையும் செய்வதற்கு அவர்களிடம் ஆர்வம் இருக்காது